கொரோனா உயிரிழப்புகளை குறைக்க பயன்படுவதாக கூறப்படும் Dexamethasone என்ற மருந்தை தேவைக்கு ஏற்ப தமிழக சுகாதாரத்துறை கொள்முதல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய்க்கு இதுவரை உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்த நோய்க்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க பல நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே லண்டனில் உள்ள RECOVERY என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனையில் Dexamethasone என்ற நுரையீரல் பாதிப்புக்கு கொடுக்கப்படும் மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கிய போது அவர்கள்விரைவில் குணமடைந்து தெரியவந்தது. இது தொடர்பாக இந்த ஆய்வில் உள்ள ஆக்ஸ்போர்டு உள்ள மார்ட்டின் லாண்ட்ரே, “கொரோனா நோயாளிகள் வென்டிலேட்டர்களில் அல்லது ஆக்ஸிஜனில் சிகிச்சையில் உள்ள போது டெக்ஸாமெதாசோன் என்ற மருந்து வழங்கப்பட்டதன் மூலம் அவர்களின் உயிர்களை அது காப்பாற்றியுள்ளது. மேலும் மிகக் குறைந்த செலவில் இந்த மருந்தை செய்ய முடியும்” என்று கூறியுள்ளார். இவர் இந்தக் கொரோனா நோய்த் தொடர்பான ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கும் பல்கலைக்கழக பேராசிரியர் ஆக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், Dexamethasone என்ற மருந்தை தமிழக சுகாதாரத்துறை விரைந்து தேவைக்கேற்ப கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம், கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தினை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்தினை பயன்படுத்துவதன் மூலம் இறப்பு விகிதம் 45 சதவீதத்திலிருந்து 20 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதால், இந்த மருந்தினை தமிழக சுகாதாரத்துறை வழங்கி வருகிறது.
இதன் விலையும் மற்ற மருந்துகளை விட குறைவாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்