மும்பையில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியான தாராவி கொரோனா பாதிப்பை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துள்ளது.
ஆசியாவின் 2அது மிகப்பெரிய குடிசை குடியிருப்பு பகுதியாக இருப்பது மும்பையின் தாராவி. இங்கு சுமார் 45,000 குடும்பங்கள் குடியிருக்கின்றனர். இதில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு 80 குடும்பங்களுக்கு ஒரு பொதுக்கழிப்பிடம் என்ற வகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தாராவி பகுதிக்குள் கொரோனா பரவியதால் அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பினர் கொண்டனர்.
மக்கள் இடைவெளியுடனும், தனிக் கழிப்பறைகளுடன் வசிக்கும் பகுதிகளிலேயே கொரோனா தீவிரமாகப் பரவும் நிலையில், தாராவி மக்களின் நிலை என்ன ஆகுமோ ? எனப் பலரும் கவலை தெரிவித்தனர். இதையடுத்து தாராவியில் கடுமையான பொது முடக்கத்தை காவல்துறையினர் அமல்படுத்தினர். அடிக்கடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அறிகுறிகள் தென்பட்ட நபர்களை உடனே மருத்துவமனை வளாகங்கள் மற்றும் தனிமை கூடங்களுக்கு மாற்றினர்.
அத்துடன் அப்பகுதியைச் சுற்றியிருந்த பள்ளிகள் மற்றும் விளையாட்டு வளாகங்களை கொரோனா மையங்களாக மாற்றி மக்களைத் தீவிரமாகக் கண்காணித்தனர். மக்கள் ஊட்டச்சத்து நிறைந்து உணவுகளை உண்பதற்கு அரசு சார்பில் வழிவகை செய்யப்பட்டது. குறிப்பாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 3 வேளையும் சத்தான உணவு சாப்பிடுவது உறுதி செய்யப்பட்டது. மக்களுடன் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து பொது முடக்கத்தையும், அறிவுரைகளையும் பின்பற்றினர்.
அதன் எதிரொலியாக தாராவியில் கொரோனா தாக்கம் பெரிதளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மே மாதத்தின் தொடக்கத்தில் நாள்தோறும் 60க்கு மேல் அப்பகுதியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 20 எனக் கொரோனா பாதிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர். தாராவியில் இந்தக் கொரோனா கட்டுப்பாட்டு முயற்சி அனைத்து நகரங்களும் கற்க வேண்டிய பாடம் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி