குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காவிரி டெல்டா பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. 11 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ல் இன்று திறக்கப்பட்டுள்ளது.


Advertisement

காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் போதுமான நீர் இருப்பு இருந்தால் மட்டுமே ஜூன் 12ம் தேதி திறக்கப்படும். இதற்கு முன்பு 2008ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதற்கு பின்பு போதிய நீர் இல்லாத காரணத்தால் ஜூன் 12ம் தேதி என்ற குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்படவில்லை. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு ஜூன் 12ம் தேதியான இன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

image


Advertisement

முதலமைச்சர் பழனிசாமி இன்று மேட்டூர் அணையை திறந்து வைத்தார். 8 கண் மதகு பகுதியில் மலர் தூவி அணையை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement