JUST IN

Advertisement

மதுரையை சேர்ந்த மோகனுக்கு பிரதமர் மோடி பாராட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாம் மேலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Advertisement

மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி "மதுரையில் சலூன் நடத்தும் மோகன் தனது மகனின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த 5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுத்துள்ளார். தனது வருமானம் முழுவதும் மக்களுக்கு செலவிடும் மதுரையைச் சேர்ந்த மோகனுக்கு பாராட்டுகள். பொது முடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதுதான் உலகமே உற்று நோக்கி உள்ளது. மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்தால் தான் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். கொரோனாவுக்கு எதிரான போரில் மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர். மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைந்த அளவு பாதிப்பே உள்ளது. இந்திய மக்களின் சேவை மனப்பான்மை காரணமாகவே இந்த போரில் வலுவுடன் போரிட முடிகிறது.

PM Narendra Modi's letter to nation; lists achievements ...


Advertisement

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னையை சந்திக்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். யோகா ஆயுர்வேதத்தை மக்கள் தினசரி செய்ய தொடங்கியதை பார்க்கமுடிகிறது.

யோகாசனம் மூலம் சுவாசப் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி தயாரிப்பு போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம். யோகா ஆயுர்வேதத்தை கொரோனாவுக்கு எதிராக எவ்வாறு பயன்படுத்தலாம் என உலகத் தலைவர்கள் என்னிடம் கேட்டனர்.

இச் சூழலில் கல்வி கற்பித்தலில் ஆசிரியர்கள் மாணவர்கள் புதிய முறையை கண்டுபிடித்தது மகிழ்ச்சி தருகிறது. மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் போலீசார் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்." எனத் தெரிவித்தார்


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement