தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர், “தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இதனைத்தொடர்ந்து ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருத்தணியில், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வெயில் 40 டிகிரி செல்சியஸ் தாண்டி பதிவாகும்.”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்