JUST IN

Advertisement

5 நாட்களுக்கு அரபிக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் -சென்னை வானிலை ஆய்வு மையம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அடுத்த 5 நாட்களுக்கு அரபிக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Advertisement

image

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் மேற்கு மத்திய மற்றும் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.


Advertisement

image

இது மட்டுமல்லாமல் நீலகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வெப்பநிலையைப் பொருத்தவரை தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருப்பூர் வேலூர், கரூர், திருச்சி, மதுரை திருத்தணி ஆகிய இடங்களில் வெப்பநிலை அதிகமாக பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும்  ஆகையால் அந்தப் பகுதிகளில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement