“டாடி வீட்டில் ஒரு விளையாட்டுப் பொழுதில்” - பழைய நினைவில் மூழ்கிய சச்சின்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
தாதா சவுரவ் கங்குலி வீட்டில் விருந்து சாப்பிட்டதை சச்சின் டெண்டுல்கர் நினைவுகூர்ந்துள்ளார். 
 
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். ஆகவே அவர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் தங்களின் பழைய நினைவுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். சில வீரர்கள் இன்ஸ்டா பக்கத்தில் நேரலை அரட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகின்றனர். 
 
image
 
இந்நிலையில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவரது இன்ஸ்டா பக்கத்தில் சவுரவ் கங்குலியுடனான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒரு காலத்தில் ஆட்டக் களத்தில் சச்சின் டெண்டுல்கரும் சவுரவ் கங்குலியும் மிகச் சிறந்த ஜோடியாக வலம் வந்தவர்கள். ஆகவே தனது நண்பர் கங்குலி வீட்டில் தான் செலவழித்த தருணத்தை #throwbackthursday என்ற ஷேடேக் போட்டு சச்சின் நினைவுகூர்ந்துள்ளார்.
 
சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், “கங்குலி வீட்டில் கழித்த ஒரு விளையாட்டான மாலைப் பொழுது. உணவு மற்றும் அன்பான விருந்தோம்பலால் மகிழ்வித்தார். உங்கள் அம்மா நன்றாக இருக்கிறார் என்று நம்புகிறேன். அவளுக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். இந்தப் பதிவில் கங்குலியை டாடி எனச் செல்லமாகக் கூறியுள்ளார் சச்சின்.
 
image
 
தற்சமயம் பிசிசிஐயின் தலைவராகப் பதவி வகித்து வருகிறார் சவுரவ் கங்குலி. உலகின் மிகப் பெரிய வீரரான சச்சினும் கங்குலியும் 15 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் ஒன்றாக விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை 'தாதா' என்று எல்லோரும் அழைத்தாலும், அவரை தான் மட்டும் 'டாடி' என்று அழைத்து வருவதாக டெண்டுல்கர் முன்பே பேட்டியில் தெரிவித்தார்.
 
 
 
loading...

Advertisement

Advertisement

Advertisement