JUST IN

Advertisement

 "சச்சினைப்போல்தான் ஆட்டத்தின் சூழ்நிலை பார்த்து ஆடுவேன்” - பிரியம் கார்க்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 

Helo வின் சிறப்பு நேரலையில் பங்கு பெற்ற இந்திய U19 அணியின் கேப்டன் பிரியம் கார்க் பகிர்ந்த பிரத்யேக தகவல்கள்.


Advertisement
 
1. வீட்டிலிருந்தபடியே ரசிகர்கள் பாதுகாப்பாகவும்,மகிழ்ச்சியாகவும் போட்டிகளைக் காணும் வகையில் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தயார்.
 
2. இந்திய U19 வரலாற்றில் சிறந்த கேப்டன் கைப், அவர்தான் இந்திய அணிக்காக முதல் U19 வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
 
image
 
3.நான் சில சமயங்களில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டது உண்டு. எனது ரஞ்சி அணிக்காகவும், நாட்டிற்காக விளையாடும் போதும் ஸ்லெட்ஜிங் செய்திருக்கிறேன். அவர்கள் எதிர்கொள்ளும் வீரர்களின் வலிமையைப் பொறுத்து ஸ்லெட்ஜிங் சாதாரணமான விசயம்.  நான் பல சமயங்களில் ஸ்லெட்ஜிங்கை எளிதாகக் கடந்துவிடுவேன் ஆனால், சில சமயம் அது உங்கள் கவனத்தைத் திசை திருப்பி எதிர்மறையான எண்ணங்களை விளைவிக்கும். நீங்கள் கவனமாக இருந்தால் அதனைத் தவிர்க்கலாம். மன வலிமையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
 
4.கிரிக்கெட் எல்லா நிலைகளிலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். அது எப்போதும் மாறாது. ஆனால், நீங்கள் வளர வேண்டும். அடிப்படையான விசயங்கள் ஒன்றுதான் என்றாலும், உங்கள் மனவுறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
 
5. யஸஸ்வி ஜெய்ஸ்வால் உறுதியானவர், அவரின் அந்த குணமே அவரின் இந்த நிலைக்குக் காரணம். அவர் எப்போதும் கவனமாக இருக்கத் தியானம் செய்வதுண்டு. அவரின் நல்ல எண்ணங்களே அவர் உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் காரணம்.
 
image
 
6.ரவி பிஸ்னோய் தெளிவான மனநிலை உடையவர். அவர் எப்போதும் கடின உழைப்பை விரும்புவார். அவர் மைதானத்தில் தன்னுடைய 100% உழைப்பைக் கொடுப்பார் அது எங்களை உற்சாகப்படுத்தும். அவரின் பந்துவீச்சுக்கு நான் 10/10 மதிப்பு கொடுப்பேன்.
 
7.நான் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே விளையாடுவேன். சச்சின் டெண்டுல்கர் அனைத்து வகையான போட்டிகளிலும் சமநிலையைக் கையாள்வார். எந்த சூழ்நிலையில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர் நன்றாகப் புரிந்துவைத்துள்ளார். நானும் அதேபோல் தான் ஆட்டத்தின் சூழ்நிலையைப் பொறுத்துச் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.
 
image
8.தற்போதுள்ள பிளேயிங் லெவனில் விரும்பும் பேட்ஸ்மேன் ரோஹித், சுழற்பந்துவீச்சாளர் குல்தீப், வேகப்பந்துவீச்சாளர் பும்ரா.
 
9. கிரிக்கெட்டை கற்றுக்கொள்ளச் சிறந்த வயது 8 முதல் 12 வரை.
 
10. டிராவிட்டின் அனுபவத்திலிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்.
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement