JUST IN

Advertisement

கொரோனாவுக்கு சித்த மருத்துவச் சிகிச்சை - சென்னையில் 73 பேருக்கு சித்த வைத்திய உணவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
சென்னையில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் சித்த மருத்துவத்தின் துணையுடன் அதனைக் குணப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கி உள்ளன.
 
image
 
சென்னை கொரோனோ பாதிப்பு அனுதினமும் அதிகரித்து வரும் நிலையில் ஆங்கில மருத்துவம் மூலம் மட்டுமே அதற்கான சிகிச்சைகள் தற்போது அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அலோபதி மருத்துவத்துடன் சித்த மருத்துவமும் இணைந்து கொரோனோ தொற்றை 5 நாட்களுக்குள் குணப்படுத்துவதற்கான பணிகள் தற்போது சென்னையில் தொடங்கி உள்ளன. 
 
image
 
சென்னை அரும்பாக்கம் டி.ஜி வைஷ்ணவா கல்லூரியில் 73 கொரோனோ நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உணவே மருந்து என்ற அடிப்படையில் சித்த மருந்துகள் அடங்கிய உணவுகள் 3 வேளையும் கபசுர குடிநீர், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 15 வகையான மூலிகைப் பொருட்கள் அடங்கிய கசாயம் மற்றும் தேநீர் ஆகியவை அளிக்கப்படுகின்றன.   சித்த மருத்துவர் கொரோனா பாதித்த நோயாளிக்கு மேற்கண்ட சிகிச்சைகள் 4 நாட்கள் அளிக்கப்பட்டு 5 ஆம் நாள் மீண்டும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
சித்த மருத்துவர் அலோபதி மற்றும் சித்த மருத்துவத்தின் துணையுடன் நடக்கும் இந்த சிகிச்சை முறை பலனளிக்கும் பட்சத்தில் இது உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement