சென்னை வர்த்தக மையத்தில் 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சிகிச்சை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.


Advertisement

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் கே.எம்.சி, ஸ்டான்லி மருத்துவமனைகளில் கொரோனாவிற்கான சிகிச்சை வார்டுகள் நிரம்பிவிட்டன. மேலும் தொற்றால் வரும் புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

image


Advertisement

25 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள இந்த பகுதி உலக முதலீட்டு மாநாடு போன்ற பல்வேறு விழாக்கள், சென்னையில் நடக்கக் கூடிய பெரிய விழாக்கள் நடத்தக் கூடிய இடமாக உள்ளது. காய்ச்சல், சளி அதிகமாக இருக்கும் அறிகுறி இருந்தால் வர்த்தக மையத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 600 படுக்கைகள் கொண்ட தனி பிரிவு ஏற்கெனவே அமைக்கப்பட்டது. ஒரு நோயாளிக்கு ஒரு அறை என்ற அடிப்படையில் சின்ன சின்ன அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை இங்கு 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வளைகுடா நாடுகளில் கொரோனாவின் கோரப் பிடியில் இந்தியர்கள்

loading...

Advertisement

Advertisement

Advertisement