ஜோதிகாவின் கருத்து தொடர்பாக நடிகர் சூர்யா அளித்துள்ள விளக்கம் சிறப்பு என்று நடிகர் விஜய் சேதுபதி ட்வீட் செய்துள்ளார்.
கோயில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாக கருதவேண்டும் என்கிற ஜோதிகாவின் கருத்தில் தாங்கள் உறுதியாகவே இருப்பதாக அவரது கணவரும் நடிகருமான சூர்யா தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக இன்று அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதில், விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றியே ஜோதிகா தனது கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும், அதை சிலர் குற்றமாக பார்ப்பதாகவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை என்று தெரிவித்துள்ள சூர்யா, நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை என்றார். பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்ற கருத்தை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்பதாக சூர்யா தெரிவித்துள்ளார். ஜோதிகாவின் கருத்தில் உறுதியாகவே இருப்பதாகவும், மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே சொல்லித்தர விரும்புவதாகவும் சூர்யா கூறியுள்ளார்.
தவறான நோக்கோடு தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பினாலும், நல்லோர், நண்பர்கள், ரசிகர்கள் தங்களுக்கு துணை நிற்பதாக சூர்யா நெகிழ்ந்துள்ளார். கொரோனா தொற்றால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்ட இந்த நேரத்திலும் தங்களுக்கு கிடைத்த ஆதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக சூர்யா குறிப்பிட்டுள்ளார். நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஆதரவளித்தோர் துளிர்க்கச் செய்துள்ளதாக கூறிய சூர்யா உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
#அன்பைவிதைப்போம் #SpreadLove pic.twitter.com/qjOlh8tHtV — Suriya Sivakumar (@Suriya_offl) April 28, 2020
இந்நிலையில், சூர்யா வெளியிட்ட அறிக்கையை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி, சிறப்பு என்று அதில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, ஜோதிகாவின் கருத்துக்கு விஜய்சேதுபதி ஆதரவு தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதனை அவர் மறுத்து இருந்தார். இந்நிலையில், தற்போது சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.
Fake ❌ pic.twitter.com/WR5vhXsXg7 — VijaySethupathi (@VijaySethuOffl) April 24, 2020
Loading More post
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
ஐபிஎஸ் அதிகாரிக்கே இவ்வளவு சிக்கலென்றால் சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன?- உயர் நீதிமன்றம்
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?