திருவண்ணாமலை: குகையில் பதுங்கியிருந்த சீன வாலிபர்: வெளிவந்த கொரோனா பரிசோதனை முடிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த சீன வாலிபருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

#TopNews மதுரை சித்திரை திருவிழா ரத்து முதல் இயங்கவுள்ள சுங்கச்சாவடிகள் வரை..!

image


Advertisement

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர்கள் அவர்கள் சொந்த நாடுகளுக்கு
செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் திருவண்ணாமலை
கிரிவல மலையில் உள்ள ஒரு குகையில் சீனாவை சேர்ந்த இளைஞர் பதுங்கியிருந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

கொரோனா நோய் பரவும் வேகம் குறைந்துள்ளது - மத்திய அரசு

image


Advertisement


அதன் பேரில் அவரை கைது செய்த காவல்துறையினர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு அனுமதித்தனர். அதில், அவருக்கு
கொரோனா நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊரடங்கு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், மருத்துவமனை கண்காணிப்பில்
வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement