திண்டுக்கல்லில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியான எண்ணிக்கை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

மாவட்ட வாரியாக பார்க்கும்போது இன்று ஒரே நாளில், சென்னை - 5, திண்டுக்கல் - 9, தஞ்சை - 4, தென்காசி - 3, மதுரை , ராமநாதபுரம், நாகை (தலா) - 2, சேலம், கடலூர், சிவகங்கை, கன்னியாகுமரி (தலா) - 1 என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

image

மாவட்ட வாரியாக மொத்த எண்ணிக்கையில் சென்னை 210 பேருடன் முதலிடத்தில் உள்ளது. அத்துடன் கோவை - 126, திருப்பூர் - 79, ஈரோடு - 64, திண்டுக்கல் - 64, நெல்லை - 56, நாமக்கல் - 45, செங்கல்பட்டு - 46, திருச்சி - 43, தேனி - 40, கரூர் - 41, ராணிப்பேட்டை - 38, மதுரை - 41, திருவள்ளூர் - 33, நாகை - 31, தூத்துக்குடி - 26, விழுப்புரம் - 23, கடலூர் - 20, சேலம் - 19, திருப்பத்தூர் - 17, விருதுநகர் - 17, திருவாரூர் - 16, வேலூர் - 16, கன்னியாகுமரி - 16, திருவண்ணாமலை - 12, தஞ்சாவூர் - 16, சிவகங்கை - 11, நீலகிரி - 9, காஞ்சிபுரம் - 8, தென்காசி - 8, ராமநாதபுரம் - 7, கள்ளக்குறிச்சி - 3, அரியலூர் - 1, பெரம்பலூர் - 1 என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

மத்திய அமைச்சருக்கு சேவிங் செய்த மகன் - ஊரடங்கு பரிதாபங்கள்..! 

loading...

Advertisement

Advertisement

Advertisement