10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை: பள்ளிக்கல்வித்துறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டன. அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே சென்றதால் தேர்வு நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், முதல்வர் பழனிசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் 10ம் வகுப்பு தேர்வு முக்கியமானது, அதனால் இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement