[X] Close

பாதுகாப்பாகவும், விரைவாகவும் கொரோனா பரிசோதனை மாதிரிகளை எடுக்கலாம் : அசத்தும் திருப்பூர்!

Subscribe
First-of-it---s-kind--corona-Sample-collection-Booth-in-tirupur

கொரோனா நோயாளிகளை கண்டறிய walk-in-sample- kiosk என்னும் பரிசோதனை முறையானது இந்தியாவிலேயே முதல்முறையாக கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறை எப்படி செயல்படுகிறது என்றால் “ஒரு சிறிய அறையில் சிறு துளையுடன் கூடிய கண்ணாடி தடுப்பு இருக்கும்.


Advertisement

image

இத்தடுப்பின் ஒரு புறம் கொரோனா அறிகுறி உள்ள நபரும் மறுபுறம் மருத்துவ பணியாளரும் இருப்பர். மருத்துவ பணியாளர் அந்த துளை வழியே கையை விட்டு அறிகுறியுள்ள நபரிடம் இருந்து ரத்தம் மற்றும் தொண்டைக்குழி திரவ மாதிரிகளை எடுப்பார். அதன் பின்னர் கொரோனா பரிசோதனைகள் எளிமையாக எடுக்கப்படுகின்றன.


Advertisement

இந்த நடைமுறை இரண்டே நிமிடங்களில் முடிந்துவிடும். இந்த எளிமையான அறையை உருவாக்க 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பாதுகாப்பாகவும், விரைவாகவும் கொரோனா பரிசோதனை மாதிரிகளை எடுக்க முடியும்.

இந்நிலையில் இந்த முறை தற்போது தமிழகத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் இந்த பரிசோதனை முறையை அறிமுகம் செய்துள்ளனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார்.


Advertisement

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடம்.. யாருக்கு அதிக பாதிப்பு தெரியுமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close