மதுபோதையில் நண்பர்களுக்குள் அடிதடி - ஒருவர் கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருப்பூரில் மதுபோதையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.


Advertisement

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் வீர சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான ஒரு பழைய கட்டடம் உள்ளது. இந்தப் பழைய கட்டடத்தின் பின்புறம் தங்கி, ஊட்டி பகுதியை சேர்ந்த விக்கி, மன்சூர், பாபு ஆகிய 3 பேர் பராமரிப்பு வேலைகள் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மது அருந்தும் போது 3 பேருக்கு இடையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மன்சூரும் பாபுவும் சேர்ந்து விக்கியை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

image


Advertisement

இதையடுத்து சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர். மேலும் அவர்கள் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடன் தங்கி இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

image

மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement