[X] Close

இத்தாலியில் சிக்கித் தவித்த 263 இந்திய மாணவர்கள் டெல்லி வருகை

Subscribe
263-Indian-students---compassionate-cases-departed-for-India-by-special-Air-India-flight-from-Rome

இத்தாலியில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் 263 பேர் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.


Advertisement

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்தியாவில் கொரோனாவிற்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை 4 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த 63 வயது முதியவர் 5வது நபராக இந்தியாவில் உயிரிழந்துள்ளார்.

image


Advertisement

கொரோனாவைத் தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இத்தாலியில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் 263 பேர் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் முறையான சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்கு பிறகு சொந்த ஊருக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

image

முன்னதாக விமான போக்குவரத்து இல்லாததால் இத்தாலியில் இந்திய மாணவர்கள் சிக்கித்தவிப்பதாக செய்திகள் வெளியாகின. அங்கு சிக்கித்தவித்த மாணவர்களும் வீடியோ மூலம் இந்திய அரசிடம் உதவி கோரினர்.


Advertisement

கொரோனா எச்சரிக்கையை மதிக்காமல் 500 பேருக்கு பார்ட்டி கொடுத்த தெலங்கானா முதல்வர் மகள்!!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close