சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட பூச்சி குறித்து நெட்டிசன்கள் ஆச்சர்யமடைந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ குறித்து நெட்டிசன்கள் தலையைப் பிய்த்து கொண்டுள்ளனர். இந்திய அதிகாரி பர்வீன் கஸ்வான் அவரது ட்விட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில் ஒரு விசித்திரமான தோற்றமுடைய உயிரினம் மெதுவாக ஒரு மரத்தில் ஏறும் காட்சி பதிவாகி இருந்தது. அதைக் கண்ட சிலர், பூச்சியாக இருக்கலாம் என்றனர். மற்றவர்கள் வெட்டுக்கிளியாக இருக்கும் என்றனர்.
ஆனால், அதைப் பார்த்தால் அந்த இரண்டு உயினங்களைப் போலவே இல்லை. குச்சிப் போல உள்ள மெல்லிய எலும்புகளை அசைத்து அசைத்து அந்த உயிரினம் முன்னோக்கி நகர்வது போல் தெரிந்தது. லேசாக பார்த்தால் குச்சுப் போல் இருந்தது.
இந்த வீடியோவை கஸ்வான், “கவனிக்கத் தவறும் விவரங்களால் இயற்கையானது எவ்வாறு நிரப்பப்படுகிறது” என்று கூறியிருந்தார். மேலும் அவர், “இயற்கை ஒவ்வொரு விவரங்களையும் துல்லியமாக நிரப்பியுள்ளது. பல முறை விவரங்களை நாம் கவனிப்பதில்லை . இதுபோன்ற உயிரினத்தை நீங்கள் இதுவரை பார்த்ததில்லை என்று நம்புங்கள்” என்றவர், இயற்கை அற்புதமானது என்று குறிட்டிருந்தார். வீடியோவை பதிவு செய்தவர், மரியா சாக்கோன் என்றும் கூறியிருந்தார். உண்மையில் அந்த உயிரினத்தைப் பார்த்தால் கிராமப்புரங்களில் குச்சிப்பூச்சி என்பார்கள் அதைப் போன்றே உள்ளது.
#Nature has filled every detail with precisel. Details which many a times we don't observe. Video by Maria Chacon. Believe me you have never seen such creature till now. #AmazingNature pic.twitter.com/jy0h9za8o0
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 16, 2020Advertisement
இந்த வீடியோ பதிவேற்றப்பட்ட பின்னர் 3,200க்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டது. மேலும், பலர் இது என்ன உயிரினமாக இருக்கும் என்று ஆராய்ச்சி நடத்திக் கொண்டுள்ளனர். பலரும் குச்சிப்பூச்சிப் போன்றே உள்ளது எனக் கூறி வருகின்றனர். கருத்துப் பதிவிட்டுள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் "இதுபோன்ற ஒரு உயிரினத்தைப் பார்த்ததில்லை... அதன் பெயர் என்ன?" என்றே கூறி வருகின்றனர்.
Loading More post
அசாதுதீன் ஒவைசியின் கட்சிக்கு தமிழகத்தில் பட்டம் சின்னம் ஒதுக்கீடு!
வேட்பாளர் தேர்வில் மிரட்டல்.. நந்திகிராம் தொகுதியில் போட்டி - அசத்தும் மம்தா பேனர்ஜி!
ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்
பவுண்டரிகள் விளாசல் - அதிரடியாக சதத்தை நோக்கி செல்லும் ரிஷப் பண்ட்!
“எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்” - கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி!