பைக் ரேஸில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் உள்பட 10 பேர் கைது..!

10-arrested-for-involving-bike-race

சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளி மாணவர்கள் இருவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.


Advertisement

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரை பைக் ரேஸ் நடப்பதாக நேற்றிரவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர், 10 பேரை மடக்கி பிடித்தனர். இவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் இருவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே, போலீசார் பொய் வழக்கு பதிவு செய்திருப்பதாக, கைது செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement