மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி. இவர் ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கின் மனைவியாவார். இப்போது ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்தவீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் பங்கேற்கவில்லை.
"தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டேன்" கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றார் வாசிம் ஜாஃபர் !
அதற்கான காரணம் மிட்சல் ஸ்டார்க் நாளை நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் தன் மனைவி விளையாட இருப்பதால், அதனை காண ஆஸ்திரேலியாவுக்கு பறந்துள்ளார். மிட்சல் ஸ்டார்க்குக்கு ஆஸ்திரேலிய அணி நிர்வாகமும் அவருக்கு அனுமதியளித்துள்ளது. இது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் " மனைவி உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடுவதை பார்ப்பது என்பது வாழ்நாளில் எப்போதாவது நிகழும் நிகழ்ச்சி. ஸ்டார்க்கின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு அவருக்கு அனுமதியளித்துள்ளோம்" என்றார்.
சென்னை திரையரங்கில் பாஹி3 படம் பார்த்த தோனி?
மேலும் தொடர்ந்த லாங்கர் "நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு மிட்சல் ஸ்டார்க்குக்கு கொஞ்சம் ஓய்வும் தேவைப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் ஹேசல்வுட், ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன் போன்ற வீரர்கள் ஸ்டார்க்குக்கு மாற்றாக தென் ஆப்பிரிக்காவுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவார்கள். அவர்களும் தங்களது திறமையை நிரூபிக்கட்டும்" என்றார்.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!