சிஏஏவுக்கு எதிராக உச்ச‌நீதிமன்றத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மனு

UN-Human-rights-commissioner-filed-a-petition-against-CAA-in-Supreme-Court

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.


Advertisement

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிஏஏ தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையரின் அலுவலகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

ஜெனிவாவில் உள்ள இந்திய அலுவலகத்தில் இத்தகவலை ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் தெரிவித்ததாக, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார். அதேநேரத்தில், இந்திய இறையான்மையைப் பாதிக்கும் வகையில், வெளிநாட்டினர் யாரும் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் ரவீஷ் குமார் தெரிவித்தார்.

image

இந்தியா சட்டத்தால் ஆளப்படும் ஜனநாயக நாடு என்றும், ஐ.நா. தொடர்ந்த மனு குறித்து உச்ச நீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Advertisement

சாதனைப் பெண்களுக்கு சர்ப்ரைஸ்: சஸ்பென்ஸை உடைத்தார் மோடி..!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement