#முக்கியச் செய்திகள் | டெல்லி கலவரம்... கேன் குடிநீர் சுத்திகரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்..

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு. வன்முறை தொடர்பாக 630 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தகவல்


Advertisement

வடகிழக்கு டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஆய்வு. கலவரத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக நியமிக்கப்பட்ட காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா எச்சரிக்கை

image


Advertisement

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக இஸ்லாமியர்கள் திசை திருப்பப்படுவதாக குற்றச்சாட்டு. தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் பேரணி

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நீடிக்கும் போராட்டம். சென்னையில் போராட்டங்கள் நடத்த அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை தடை விதிப்பு

3வது நாளாக தொடர்கிறது கேன் குடிநீர் சுத்திகரிப்பாளர்கள் வேலைநிறுத்தம். சென்னை உள்ளிட்ட நகரங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


Advertisement

image

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில் காப்பி அடிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை. புதிய தண்டனை விவரங்களை வெளியிட்டு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை

வரும் கோடையில் நாடெங்கும் வெயிலின் அளவு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் தேவைக்கேற்ப மின் உற்பத்தி உள்ளதால் கோடைக்கால மின்வெட்டு இருக்காது என அமைச்சர் தங்கமணி உறுதி.

loading...

Advertisement

Advertisement

Advertisement