JUST IN

பாலியல் தொல்லை தடைச் சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பணியிடங்களில் பாலியல் தொல்லை தடைச் சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள வணிகச் சின்னம் மற்றும் புவிசார் குறியீடு அலுவலக துணைப் பதிவாளர், பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் உதவிப் பதிவாளர் புகார் அளித்தார். மத்திய நிர்வாக தீர்ப்பாயம், தமிழ்நாடு மகளிர் ஆணையம், சமூக நலத்துறை விசாரணை என பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், இதுதொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட துணைப் பதிவாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

image

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு, பணியின்போது வேலை வாங்குவதற்காக உயர் அதிகாரி வரம்பு மீறி திட்டினார் என்ற குற்றச்சாட்டு, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடை சட்டத்தின் கீழ் குற்றமாகாது என குறிப்பிட்டனர்.

image

பொய் புகார் அளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையை காக்க கொண்டுவரப்பட்ட சட்டத்தை கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறி, தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

பாகுபலியான அமெரிக்க அதிபர் - அசந்துபோய் ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்!

Advertisement: