நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் மயங்க் அகர்வால் அரைசதம் கடந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக துணைக் கேப்டன் ரஹானே 46 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, மூன்றாம் நாளான இன்று 348 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் இசாந்த் ஷர்மா 3 விக்கெட்களும், அஷ்வின் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.
அமெரிக்காவில் சொந்தமாக தாஜ்மஹால் வைத்திருந்த ட்ரம்ப்!
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்தி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். ஆனால் பிருத்தி ஷா வெறும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதேசமயம் நிதானமாக ஆடி வரும் மயங்க் அகர்வால் அரை சதத்தை கடந்துள்ளார்.
ஏடிஎம்களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு.. நைஜீரிய இளைஞர் சென்னையில் கைது..!
தற்போதைய நிலவரப்படி இந்தியா 30.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் சேர்த்துள்ளது. மயங்க் அகர்வால் 52 ரன்களுடனும், புஜாரா 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு