“கலைப்பணியில் களப்பலியானவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலி” - வைரமுத்து...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவு பூந்தமல்லியை அடுத்த EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது,
அங்கு ஏற்பட்ட விபத்தில் கார்டூனிஸ்ட் மதனின் மருமகனான கிருஷ்ணா உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.

image


Advertisement

இச்சம்பவம் குறித்து திரைத்துறையினர் பலரும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்து இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை
வடிவிலான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில்

“கலைப்பணியில் களப்பலியானவர்களுக்குக்
கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்.
கண்ணீரையும் மனிதத் தவறுகளையும்
ஒருசேரத் துடைத்துக் கொள்வோம்;
வலியோடு பயணிப்பதே வாழ்வு.
வருந்துகிறேன்.”

எனக் கூறியுள்ளார்.


Advertisement

மேலும், பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், “நேற்று இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழப்பு செய்தி
இன்னும் மனதை நொறுக்குகிறது.” என்று தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.

loading...
Related Tags : indian 2accidentkamalhasan

Advertisement

Advertisement

Advertisement