தஞ்சை கோயில் குடமுழுக்கு; U19 அரையிறுதியில் இந்தியா... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல். 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பில் அமைகின்றன.


Advertisement

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறநிலையத்துறை தரப்பில் பதில்

சீனாவில் கொரனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 131-ஐ தொட்டது. தடுப்பு மருந்து உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அமெரிக்கா தகவல்


Advertisement

image

தாயகம் திரும்ப உதவுமாறு‌ சீனாவில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள்‌ கோரிக்கை. மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய தூதரகம் தமிழக அரசுக்கு கடிதம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவர் கைது. இடைத்தரகரிடம் தலா ஏழரை லட்சம் ரூபாய் கொடுத்தது விசாரணையில் அம்பலம்


Advertisement

image

பாகிஸ்தானுடன் போர் வந்தால் பத்தே நாட்களில் இந்தியா வெல்லும். டெல்லியில் நடைபெற்ற தேசிய சாரணர் படை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா. காலிறுதியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரம்

 

loading...

Advertisement

Advertisement

Advertisement