அரசியல் கட்சிகள் தங்களை வழிநடத்த அரசியல் ஆலோசகர்களை கொண்டுவருவது ஆச்சரியமாக உள்ளது என்று தலைமை செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சிகள், தங்கள் தேர்தல் வெற்றிகளுக்காக கார்ப்பரேட் நிறுவனங்களை நாடும் நிலைக்கு ஆளாகியிருக்கின்றன. அந்த வகையில், அரசியல் கட்சிகளுடன் பணியாற்றுவதில் ஓ.எம்.ஜி, ஐபேக் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது முன்னணியில் உள்ளன. இம்மாதிரியான நிறுவனங்களுக்கு தனிப்பட்ட அரசியல் பார்வை என்றெல்லாம் எதுவும் கிடையாது. அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணம் மற்றும் முன்வைக்கும் கோரிக்கைகளை பரிசீலித்து இவை ஆலோசனைகளை வழங்கும்.
150 கிடாய்கள், 300 கோழிகள் - மதுரை கோவிலில் நடைபெற்ற பிரியாணி திருவிழா
இதில் நம்பர் ஒன்னாக இருப்பது ’ஐபேக்’ அதாவது “இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்சன் கமிட்டி”. இந்நிறுவனத்தை இயக்குபவர் பிரஷாந்த் கிஷோர். 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கும் பின்புலத்தில் இவர்தான் வேலை பார்த்துள்ளார். நிதிஷ்குமார், ஜெகன்மோகன் ரெட்டி என பல அரசியல் தலைவர்களுக்கு இவர் வேலை பார்த்துள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருடனும் அவர் பணியாற்றி வருகிறார். இதுஒருபுறம் இருக்க, தற்போது தமிழக அரசியல் தலைவர்களும் இவரை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அரசியல் ஆலோசகராக கருதப்படும் பிரசாந்த் கிஷோரை மறைமுகமாக சாடி தலைமைச் செயலாளர் சண்முகம் பேசியுள்ளார். தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் பேசியுள்ள தலைமை செயலாளர் சண்முகம், “தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் மக்களை மூளைசலவை செய்கின்றனர்.
அரசியல் கட்சிகள் தங்களை வழிநடத்த அரசியல் ஆலோசகர்களை (Political consultant) கொண்டுவருவது ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் வந்து ஆய்வு செய்து எப்படி மக்களை புரிந்து கொள்ள முடியும். மக்களாட்சியின் மாண்பை காப்பதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருக்கிறது. மக்களாட்சியில் அனைவரும் மன்னர்கள் என்பது செயல்பாட்டில் கொண்டு வருவது மிக மிக கடினம்” என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சரியாக விளையாட முடியாவிட்டால் தோனி விடைபெற்றுக் கொள்வார் - ரவிசாஸ்திரி சூசகம்
அத்துடன், “ஜாதி மதத்தை பயன்படுத்தி அரசியலில் சுயநலமான செயல்கள் மூலம் வாக்கை சேகரிப்பது ஆபத்தானது. சாதி சமய பாகுபாடு பார்க்காத எண்ணம் மக்களிடையே உருவாக வேண்டும். சாதி சமயம் பார்க்காமல் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். நல்லவர்களுக்கு ஓட்டுபோட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே வர வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?