[X] Close

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் மனு தள்ளுபடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


Advertisement

திகார் சிறைத்துறை நிர்வாகம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்தது. அதில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகளான 4 பேரையும், தூக்கிலிட ஆணை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. அந்தக் கோரிக்கையை ஏற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வாரண்ட் பிறப்பித்தது.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


Advertisement

இதனிடையே நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், 2012-ஆம் ஆண்டு குற்றம் நடைபெற்றபோது தான் சிறுவனாக இருந்ததை பரிசீலிக்கவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த பவன் குப்தாவின் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும் பவன்குமார் சிறுவனா, இல்லையா என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டதால், மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் தெரிவித்தது.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement