JUST IN
  • BREAKING-NEWS ‌ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS ‌ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‌குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS ‌கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‌சீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை
  • BREAKING-NEWS ‌எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது
[X] Close

''தீபிகா படத்தை நானும் கேன்சல் செய்துவிட்டேன்'' - ஒரே டிக்கெட்டால் கிண்டலுக்குள்ளான ட்விட்டர்வாசிகள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜேஎன்யூ வளாகத்தில் நடைபெற்ற கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஜேஎன்யூ வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோன், மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு அளித்தார். தீபிகாவின் ஆதரவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

நடிகை என்பதையும் மீறி சமூக பிரச்னைகளில் குரல் கொடுக்கும் தீபிகாவுக்கு வாழ்த்துகள் என கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் ஒரு தரப்பு தீபிகாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். வெளிவர இருக்கும் தீபிகாவின்‘சபாக்’ திரைப்படத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

#boycottchhapaak என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்த பலரும் முன்பதிவு செய்த ‘சபாக்’ திரைப்படத்திற்கான டிக்கெட்டை ரத்து செய்து விட்டதாகவும் பதிவிட்டனர்.

 

பதிவிட்டதோடு மட்டும் இல்லாமல் கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்டையும் இணைத்திருந்தனர். ஆனால் ஒரே டிக்கெட்டை பலரும் ஷேர் செய்து 'நானும் கேன்சல் செய்துவிட்டேன். நானும் கேன்சல் செய்துவிட்டேன்' என்று கூறியுள்ளனர். ஒரே நாள், ஒரே திரையரங்கம், ஒரே நேரம், அதே 3 இருக்கைகள் என ஒரே போட்டோவை பலரும் பகிர்ந்திருப்பது இணையதளவாசிகளிடையே சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

''அது எப்படிப்பா 3 சீட்டுக்கு இவ்வளவு பேர் புக் செஞ்சி இருக்கீங்க?'' என பலரும் நகைச்சுவையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.


 ‘தர்பார்’திரையிடாததால் ரஜினி ரசிகர்கள் ரகளை... விரட்டியடித்த போலீஸ்...!


 

Advertisement:
[X] Close