ஐடி வேலையை துறந்து இயற்கை விவசாயம் செய்து வந்த பெண் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ளது பண்டேஸ்வரம் கிராமம். இந்தக் கிராமத்துக்கான பஞ்சாயத்து தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் ரேகா ராமு (37). சென்னையில் சில ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்த ரேகா, பின்னர் தன் வேலையை துறந்து இயற்கை விவசாயத்தில் இறங்கினார்.
கணவர் பார்த்தசாரதியுடன் விவசாயத்தில் இறங்கிய ரேகா உள்ளூர் விவசாயிகளுக்கும் உதவி செய்து வந்துள்ளார். விவசாயிகளின் உற்பத்தியை கொள்முதல் செய்து ஃபார்மர்ஸ் அன் கோ என்ற நிறுவனம் மூலம் சந்தைகளில் விற்பனை செய்து வந்துள்ளார்.
தங்களது உற்பத்தி பொருட்கள் மட்டுமின்றி உள்ளூர் விவசாயிகளுக்கும் உதவியதால் ரேகாவுக்கு நல்ல வரவேற்பு இருந்துள்ளது. 3 வருடங்களுக்கு
முன்பே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்த ரேகா, கடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 265 ஓட்டுகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிரதான கட்சியான திமுக, அதிமுக வேட்பாளர்களை ரேகா தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஏஏ எதிர்ப்பு பேரணியின்போது நொடிப்பொழுதில் ஆம்புலன்ஸுக்கு வழி: வைரல் வீடியோ!
இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ரேகா, நான் கிராமத்தில் அடிப்படையிலான சில சேவைகளை செய்து வருகிறேன். கிராமத்தில் எந்த வேலையை தொடங்க வேண்டுமென்றாலும் ஊராட்சி மன்ற தலைவரின் ஒப்புதல் தேவைப்பட்டது. அப்போது தான் தேர்தலில் ஏன் நானே போட்டியிடக்கூடாது என்று யோசித்தேன் என்று தெரிவித்துள்ளார். பல வருடங்களாக கிராமத்தில் வசித்து வரும் ரேகாவின் கணவரான பார்த்தசாரதியின் குடும்பம், கிராமத்தில் உள்ள சில பிரச்னைகளை பட்டியலிட்டுள்ளது.
ஆற்று மணல் திருட்டு, ரேஷன் பொருட்களில் ஊழல், உள்ளூர் சந்தைகளிலேயே காய்கறிகள் பற்றாக்குறை உள்ளிட்ட சில அடிப்படை பிரச்னைகள் உள்ளதாகவும் பிரச்னைகள் மீது கவனம் செலுத்தப்பட்டு கிராமத்தின் வளர்ச்சிக்கு உதவ போவதாகவும் ரேகா-பார்த்தசாரதி தம்பதி தெரிவித்துள்ளனர்.
Loading More post
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
இரவு நேர ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
மாஸ்க் அணியாததை தொடர்ந்தால் ரூ.10,000 அபராதம் - உ.பி. அரசு அதிரடி!
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்