சென்னையில் சாப்பிடும்போது தொண்டையில் போண்டா சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு காமராஜர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன். ராயப்பேட்டையில் உள்ள டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி(45). இவர் தன் கணவருடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு
திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தை இல்லை. இந்நிலையில், நேற்று பத்மாவதியும் அவரது தாயாரும் போண்டா வாங்கி வந்துள்ளனர். அப்போது பத்மாவதி சாப்பிடும்போது தொண்டையில் போண்டா அடைத்துள்ளது. இதில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பத்மாவதியை கொண்டு சென்றனர்.
பரிசோதித்த மருத்துவர்கள் பத்மாவதி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதனூர் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றவர் உயிரிழப்பு
Loading More post
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
ஐபிஎஸ் அதிகாரிக்கே இவ்வளவு சிக்கலென்றால் சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன?- உயர் நீதிமன்றம்
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?