‘தைரியம் இருந்தால் சிஏஏ மீது ஐ.நா பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள்’ - பாஜகவுக்கு மம்தா சவால்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தைரியம் இருந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் மீது ஐ.நா பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள் என்று பாஜகவுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.


Advertisement

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மேற்குவங்க மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். கொல்கத்தாவில் மாபெரும் பேரணியையும் அவர் நடத்தினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, “பாஜகவுக்கு தைரியம் இருந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றின் மீது ஐநா பொதுவாக்கெடுப்பு நடத்தட்டும். மெஜாரிட்டி இருக்கிறது என்பதற்காகவே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. சமூகத்தின் அனைத்து தூண்களையும் நெறுக்குகிறீர்கள். 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பாஜக, 70 ஆண்டு கொண்டுவரப்பட்ட நம்முடைய குடியுரிமை ஆவணங்களை கேட்கிறது” என்றார்.


Advertisement
loading...
Related Tags : UN ReferendumMamata BanerjeeCAANRC

Advertisement

Advertisement

Advertisement