போர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் செல்வாக்குமிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலில் நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
2019ம் வருடத்திற்கான போர்ப்ஸ் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவின் 100 பிரபலமானவர்கள் பட்டியலில் நடிகர் அஜித், விஜய், தனுஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஈட்டப்பட்ட வருவாய் மற்றும் அவர்களின் புகழ் அளவை மையமாக வைத்து இந்த தரவரிசையை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளார். இவர் 2019ம் ஆண்டில் 252 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் அக்ஷய் குமாரும், மூன்றாவது இடத்தில் சல்மான் கானும் உள்ளனர். அதிகமாக பாலிவுட் நடிகர்களையும், கிரிக்கெட் வீரர்களையும் கொண்டுள்ள இந்த பட்டியலில் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்களும் இடம்பிடித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் 13வது இடத்தை பிடித்துள்ளார். இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் 16வது இடத்தையும், நடிகர் விஜய் 47வது இடத்தையும் பிடித்துள்ளார். நடிகர் அஜித் 52வது இடத்தையும், கமல்ஹாசன் 56வது இடத்தையும், தனுஷ் 64வது இடத்தையும் பிடித்துள்ளனர். அதேபோல், இயக்குநர் ஷங்கர், சிவா, கார்த்திக் சுப்பாராஜ் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?