பழனியில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்துவிட்டு குளத்தில் குதித்த திருடர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து ஆவினன்குடி கோவிலுக்கு செல்லும் வையாபுரி குளம் சாலையில் பெண் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது இரண்டு மர்மநபர்கள், பெண்ணின் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர். அப்பெண் கூச்சலிட்டதை கேட்டு அவ்வழியே வந்த பொதுமக்கள் இருவரையும் விரட்டினர். பொதுமக்கள் கையில் சிக்காமல் தப்பிக்கும் எண்ணத்துடன் திருடர்கள் இருவரும் வையாபுரி குளத்திற்குள் குதித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் குளக்கரையை சுற்றி நின்றனர். குளத்தில் குதித்த திருடர்கள் இருவரும் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நீரில் அங்குமிங்கும் அலைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர போலீசார், குளத்தின் மறுகரையில் உள்ள பாளையம் பகுதிக்குள் நுழைந்து திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் பாளையம் பகுதியில் கரையேறிய திருடர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர் அங்குவந்த போலீசார் இருவரையும் மீட்டு, விசாரணை செய்ததில் ஒருவர் பெயர் சுரேஷ், இன்னொருவர் பெயர் பிரகாஷ் என்பதும், இருவரும் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?