இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கழிவறையில் மென் பொறியாளர் நிர்வாணக் கோலத்தில் இறந்து கிடந்ததால் சாவில் மர்மம் உள்ளதாகக் கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் வல்லம் அருகே உள்ள தளவாழப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. வயது 31. மென் பொறியாளரான இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இளையராஜா செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள இன்ஃபோசிஸ் ஐ.டி. நிறுவனத்தில் கடந்த ஐந்து வருடமாக மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இளையராஜா இறந்து கிடந்ததாகக் கூறி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் அவருடைய சடலத்தை செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த தகவல் அவருடைய குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. நேரில் வந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவருடைய சடலத்தை பார்த்த பின்பு, சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பிரேதப் பரிசோதனைக்கு பிறகு சாவில் மர்மம் இருந்தால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கூறியதால் சாலை மறியல் கைவிடப்பட்டது. அவருடைய உறவினர் இதுப்பற்றி கூறும்போது, இளையராஜாவிற்கு எந்த கெட்ட பழக்கமும், தற்கொலை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அவருடைய சாவில் மர்மம் இருப்பதால் இதற்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கும் வரையில் உடலை வாங்கமாட்டோம் என கூறினார்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி