90 சதவித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடும் உன்னாவ் பெண் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரிக்கப்பட்ட பெண்ணுக்கு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Image result for unnao rape victim

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் 10 ‌நாள்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர். வழக்கு விசாரணைக்காக அந்த பெண் தனது கிராமத்திலிருந்து, ரே‌ பரேலி‌யில் உள்ள நீதிமன்றத்து‌க்கு பு‌றப்பட்டார். வழியில் அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய 5 பேர், மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு தீவைத்து கொளுத்தினர். 


Advertisement

Image result for unnao rape victim

இதில் படுகாயமடைந்த அந்த பெண், லக்னோவிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் , பெண்ணின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதென தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் குழு ஒன்று பெண்ணின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர். முன்னதாக வாக்குமூலம் அளித்த அந்த பெண், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர்களே, தீவைத்ததாக தெரிவித்துள்ளார். அப்பெண்ணுக்கு தீ வைத்த 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் இரண்டு பேர், 10 நாட்களுக்கு முன்பு இதே வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர்கள்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement