நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கும் ‘குயின்’ வெப் சீரீஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து, பின்னர் தமிழக முதலமைச்சர் ஆனவர் ஜெயலலிதா. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பலரும் தற்போது திரைப்படமாக எடுத்து வருகின்றனர். தலைவி என்ற பெயரில் இயக்குநர் விஜயும், ‘தி அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் பிரியதர்ஷினியும் ஜெயலலிதாவின் பயோபிக்கை எடுக்கிறார்கள். இதில், ‘தி அயர்ன் லேடி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.
அதேபோல், ‘தலைவி’ படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ராவத் நடித்து வருகிறார். இதேபோல், கௌதவ் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘குயின்’ என்ற பெயரில் வெப் சீரியஸ் தயாராகி வருகிறது. இதில், கௌதம் உடன் பிரசாத் முருகேசன் என்பவரும் இயக்குநராக பணியாற்றுகிறார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கும் ‘குயின்’ வெப் சீரீஸின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் பள்ளிக்காலம், இளமைக்காலம், திரையுலக காலம், அரசியல் பிரவேசம், எம்ஜிஆர் இறப்பு என பல காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதில், ஜெயலலிதாவின் பெயர் சக்தி ஷேசாஸ்திரி என இடம்பெற்றுள்ளது. அதேபோல், எம்.ஜி.ஆர் பெயர் ஜி.எம்.ஆர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை