“பூங்காவில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகம்” - கோவை சிறுமி சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவை சீராநாயகன்பாளையத்தில் சில தினமுன்பு பள்ளி மாணவி ஒருவரை சக நண்பர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை நடந்தேறியது. அது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பூங்காவில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Advertisement

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி கோவை சீராநாயக்கன்பாளையத்தில் உள்ள ஐஸ்வர்யா நகர் பூங்காவிற்கு சக நண்பர்களுடன் 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்றார். அது இரவு நேரம் என்பதால் மணிகண்டன் என்பவர் அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 


Advertisement

மேலும், மற்றொரு நபர் இச்சம்பவத்தை வீடியோ எடுத்ததாகவும் புகார் எழுந்தது. இச்சம்பவத்திற்கு ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன் மற்றும் நாராயண மூர்த்தி ஆகிய 4 பேர் உடந்தையாக இருந்துள்ளனர்.

 அந்த 4 பேரை முதல்கட்டமாக போக்சோவில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில் கோவை சீராநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள ஐஸ்வர்யா நகர் பூங்காவை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் இந்தப் பூங்காவில் முறையான பாதுகாப்பு இல்லாததால் இதை போன்ற சமூக விரோத நடவடிக்கைகள் அரங்கேறி வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்தப் பூங்கா நகராட்சியின் 15வது வார்டு எல்லையின் கீழ் இயங்கி வருகிறது.

இந்தச் சம்பவம் பற்றி அப்பகுதிவாசிகள், “எங்கள் பகுதியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இங்குள்ள பெரும்பாலான குடும்பங்களில் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் பயப்படுகிறோம்” என்று இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.


Advertisement

“பூங்காவின் அருகே உள்ள தனிமையான பகுதியை பெரும்பாலும் சமூக விரோதிகளே பயன்படுத்தி வருகின்றனர். பலமுறை புகார் கூறியும் போலீஸ் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை. தினமும் முறையாக ரோந்து வந்தாலே இதை போன்ற பாலியல் வன்கொடுமை நடந்திருக்காது” என்று கூறியுள்ளார் மற்றோரு குடியிருப்புவாசி.

"பூங்கா எப்போது திறக்கப்படுகிறது? எப்போது மூடப்படும் என்பது எங்களுக்குத் தெரியாது. பல ஜோடிகள் எல்லா நேரங்களிலும் இடத்தை ஆக்கிரமித்து உட்கார்ந்திருப்பதை நாங்கள் பார்க்கிறோம்”எனக் கூறியுள்ளார் மற்றொரு குடியிருப்பாளர் சதாசிவம். ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement