JUST IN
  • BREAKING-NEWS ‌எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீம், தவ்பீக்கிடம் நாகர்கோவில் நேசமணி நகர் காவல்நிலையத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS ‌குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் பாலசுந்தர்ராஜ் என்பவரை கைது செய்தது சிபிசிஐடி
  • BREAKING-NEWS ‌நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
[X] Close

இன்ஸ்டாகிராம் முடக்கம் குறித்து ட்விட்டரில் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இன்ஸடாகிராம் வலைத்தளம் தற்போது முடங்கி உள்ளதாக அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் தளத்தை தற்போது பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் முடங்கியுள்ளதாக சிலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் அவர்களால் தங்களின் பக்கத்தை பார்க்க முடியவில்லை, புதிதாக படங்கள் பதிவிட முடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளனர். 

இந்நிலையில் இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில்,“சிலரால் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்த முடியவில்லை என்பதை நாங்கள் அறிவோம். இந்தப் பிரச்னையை சரி செய்வதற்கான வேலையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். விரைவில் இந்தப் பிரச்னை சரியாகும்” எனத் தெரிவித்துள்ளது. 

Advertisement:
[X] Close