[X] Close >

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமைகோரி 3 கட்சிகள் சார்பில் கடிதம்

Shiv-Sena--NCP--Congress-leaders-to-meet-Maharashtra-governor

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநர் மாளிகையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

மகாராஷ்டிராவில் அவசர கதியில் ஆட்சி அமைக்கப்பட்டதற்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. ஆட்சியமைப்பதற்கான ஆதரவு க‌டிதம், குடிய‌ரசுத் ‌தலைவர் ஆட்சியை திரும்பப் பெறுவற்கு அளித்த பரிந்துரை கடிதம் ஆகிய இரண்டும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


Advertisement

இந்நிலையில் ஆட்சியமைக்க தங்களிடம் 162 எம்.எல்.ஏக்கள் உள்ளதாக அந்த மூன்று கட்சிகளின் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ஜெயந்த் பாட்டீல், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, காங்கிரஸ் தரப்பில் அசோக் சவான் உள்ளிட்ட தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமைகோரி ஆளுநர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். தேவேந்திர ஃபட்னாவிஸ்-அஜித் பவார் தலைமையிலான அரசுக்கு போதிய எண்ணிக்கையில் ஆதரவில்லை என கடிதத்தில் சிவசேனா கூட்டணியினர் குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close