JUST IN

Advertisement

ரஜினி எனும் வெற்றுபிம்பம் தூள் தூளாகும் - சீமான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2021 சட்டப்பேரவை அரசியலில் அதிசயம் நிகழும் என ரஜினிகாந்த் கூறியதை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 


Advertisement

2021 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் மக்கள் 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமாநிலையத்தில் தெரிவித்திருந்தார். 

 


Advertisement

இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ஆம்! அதிசயம் நிகழும். தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும் என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுபிம்பம் இனமானத் தமிழார்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021ல் நடக்கும், நடந்தே தீரும்.” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement