தாமாக கடன் கொடுக்க முன்வரும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை மக்கள் ஆராய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் அகில இந்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பணியாளர் கூட்டமைப்பின் சார்பில் 66வது ஆண்டு விழா நடைபெற்றது. கேரள கூட்டுறவு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை கேரள முதல்வர் பினராயி விஜயன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “கூட்டுறவு வங்கிகள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து உதவி வருகின்றன. அதேநேரம் தாமாக முன் வந்து கடன் கொடுக்கும் இதர நிதி நிறுவனங்கள் அங்கீகாரம் உள்ளதுதானா? அவற்றின் கடந்தகால செயல்பாடுகள் என்ன? என்பது குறித்து ஆராய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கூட்டத்தில் கேரள மின் வாரிய அமைச்சர் எம்.எம்.மணி மற்றும் இடுக்கி மக்களவை உறுப்பினர் டீன் குரியாக்கோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?