வாகன தணிக்கையில் நிற்காமல் சென்ற இளைஞர் - போலீசார் தாக்கியதில் தாய் உயிரிழப்பு?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வாகன தணிக்கையின்போது நிற்காமல் சென்ற இளைஞரை போலீசார் தாக்கியபோது அவரின் தாய் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

கள்ளக்குறிச்சியில் தீயணைப்பு நிலையம் எதிரே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கரவாகனத்தில் தாயுடன் சென்ற இளைஞரை தடுத்து நிறுத்த போலீசார் முற்பட்டனர். ஆனால் அந்த இளைஞர் நிற்காமல் செல்ல முயன்றுள்ளார். 

இதையடுத்து இளைஞரை போலீசார் தாக்கிய போது பின்னால் அமர்ந்திருந்த அய்யம்மாள் மீது அடி விழுந்ததாக தெரிகிறது. இதில் கீழே விழுந்த அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement