நெருங்கும் புல்புல் புயல் ! கொல்கத்தா விமான நிலையம் மூடல்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே புல்புல் கரையை கடக்க இருப்பதால் கொல்கத்தா விமான நிலையம் நாளை காலை 6 மணி வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இன்று இரவு 8 மணியில் இருந்து 11 மணிக்குள் கரையை கடக்கும் புல்புல் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடக்க உள்ளது. தற்போது அதி தீவிர புயலாக உள்ள புல்புல் தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும் போது 110-120 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருக்கிறது. சில சமயங்களில் 135 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement