[X] Close >

டி10 கிரிக்கெட்: மராத்தா அராபியன்ஸுக்காக யுவராஜ் சிங் ஒப்பந்தம்!

Yuvraj-Singh-to-play-in-Abu-Dhabi-T10-tournament

டி10 லீக் கிரிக்கெட் போட்டியில், மராத்தா அராபியன்ஸ் அணிக்காக யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தனது ஓய்வுக்குப் பிறகு, வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் பங்கேற்க, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டிருந்தார். அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து வெளிநாடுகளில் விளையாடி வருகிறார். சமீபத்தில் கனடாவில் நடந்த குளோபல் டி20 தொடரில் பங்கேற்றார்.


Advertisement

இப்போது, அபுதாபி டி-10 லீக் கிரிக்கெட் போட்டியில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில், 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒன்றான மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெய்ன் பிராவோ தலைமையிலான இந்த அணியில் இலங்கை வீரர் மலிங்காவும் உள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close