9 மாதங்களில் ஒரே ஒரு டாடா நானோ விற்பனை

In-the-first-9-months-of-the-current-year--no-Tata-Nano-car-was-manufactured

நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் ஒரு டாடா நானோ கார் கூட தயாரிக்கப்படவில்லை. ஏற்கெனவே தயாரானதில் ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனையானது.


Advertisement

டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவின் கனவுக் கார் தயாரிப்பாக நானோ மாடல் உருவானது. ஏழைகளும் காரில் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் 2008 இல் தொடங்கப்பட்ட நானோ காருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, படிப்படியாக நானோ விற்பனை குறைந்ததால், அதன் தயாரிப்பும் குறைக்கப்பட்டது. 


Advertisement

கடந்த ஆண்டில் 297 நானோ கார்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், முந்தைய இருப்பையும் சேர்த்து 299 கார்கள் விற்பனையாகின. இந்த ஆண்டில் ஒரு கார்கூட உற்பத்தி செய்யப்படாத நிலையில், ஒரே ஒரு கார் மட்டும் விற்பனையானதாக பங்குச் சந்தைக்கு டாடா மோட்டார்ஸ் தகவல் அளித்துள்ளது. மேலும், வருகிற ஏப்ரல் முதல் பிஎஸ் 6  விதிமுறைகள் கட்டாயமாகும் நிலையில், டாடா நானோவில் அந்த தொழில்நுட்ப வழி இல்லாததும் அதன் தயாரிப்பை கைவிடக் காரணமாக கூறப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement