கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது. கடலூரில் 100-க்கும் அதிகமானோர் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனை முடிவில் 9 பேருக்கு டெங்கு உறுதியாகி இருப்பது தெரியவந்தது.
அதேபோல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் தினந்தோறும் 3 அல்லது 4 பேர் வரை டெங்கு பாதிப்பால் அனுமதிக்கப்படுவதாக அம்மருத்துவமனையின் டீன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்மையில் பெய்ந்த பருவமழை சீதோஷன நிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் மற்றும் இரும்பல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை 20% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர சுகாதார பணிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டெங்கு தடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Loading More post
மேற்கு வங்க தேர்தல்: பரப்புரை தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்
கேரளாவில் இருந்து தமிழகம் வர இ பாஸ் கட்டாயம்: எல்லையில் சோதனையை தீவிரப்படுத்தும் போலீசார்!
அதிகரிக்கும் கொரோனா: 10 மாநிலங்களில் உயர்மட்ட குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்!
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!