புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது கதாநாயகர்களுக்கு பேனர்கள் வைப்பதற்கு பதிலாக மக்களுக்கு இலவசமாக தலைகவசம் வழங்குங்கள் என நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார். இதை ஏற்று நடிகர் சூர்யாவின் நெல்லை மாவட்ட ரசிகர்கள் 200 தலைக்கவசங்களை வழங்க முன் வந்துள்ளனர்.
சென்னையில், பேனர் விழுந்து சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்ததை தொடர்ந்து, நடிகர்கள் பலர் பேனர் கலாசாரத்தை கைவிடும்படி தங்களது ரசிகர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். ‘காப்பான்’ திரைப்பட விழாவில் பேசிய நடிகர் சூர்யா, பேனர், கட் அவுட்டுகள் வைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் நடிகர்களின் ரசிகர்கள் பேனர் வைப்பதை விட மக்களுக்கு தலைக்கவசம் வழங்கினால், அவர்களே உண்மையான காப்பான்களாக மாறுவார்கள் என நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து நெல்லை சூர்யா ரசிகர் மன்றத்தினர், 200 தலைக்கவசங்களை மக்களுக்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ