முன்னாள் எம்.எல்.ஏ குட்டப்பட்டி ஆர்.நாராயணன் மறைவு 

Congress-Party-s-ex-MLA-Kuttapatti-R-Narayanan-passed-away

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ குட்டப்பட்டி ஆர்.நாராயணன் உடல்நலகுறைவால் மறைந்தார். 


Advertisement

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ குட்டப்பட்டி ஆர்.நாராயணன்(97). இவர் காமராஜரின் தீவிர ஆதரவாளர். அத்துடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தொண்டர்களில் ஒருவர். இவர் கடந்த 1977ஆம் ஆண்டு மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ ஆவார். இவர் மக்களுக்கு ஆற்றிய பணிகளால் ‘சேலம் காமராஜர்’ என்று அழைக்கப்பட்டார். அத்துடன் இவர் எம்.எல்.ஏ பதவிக் காலம் முடிந்த பிறகும் மக்களுக்கு பணி ஆற்றுவதிலேயே முழு மூச்சாக இருந்தார். 1980ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவர் சுயேச்சை வேட்பாளர் செம்மலையை 19 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.  


Advertisement

சேலம் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான  குட்டப்பட்டி கிராமத்திற்கு முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை வரவழைத்த பெருமை குட்டப்பட்டி நாராயணனுக்கு உண்டு. மேலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலம் தவிர மற்ற ஆண்டுகளில் குட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட குட்டப்பட்டி நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது உடல்நல குறைவால் அவர் மறைந்துள்ளார். தற்போது இருக்கும் அரசியல் சூழலில் பதவியில் இருக்கும் போதே எம்.எல்.ஏக்கள் சிலர் மக்கள் பணியை செய்யாமல் இருக்கின்றனர். ஆனால் இவர் தனது பதவி முடிந்த பிறகும் மக்கள் பணி செய்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியதாக உள்ளது. காமராஜர், கக்கன் ஆகியவர்கள் வரிசையில் இவரும்  மக்களுக்காக உழைத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். 97 வயதான குட்டப்பட்டி நாராயணன் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியாக இருந்ததுடன் , காமராஜரைப் போன்றே உடையணியும் பழக்கமுடையவர். தொடர்ச்சியாக காமராஜர் பிறந்த நாள் விழாக்களை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement