தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து நிலவின் ஆய்வில் முனைப்பு காட்டுவோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
முழுக்க இந்தியாவிலேயே தயாரான சந்திரயான்-2 விண்கலத்தின், விக்ரம் லேண்டர் இன்று அதிகாலை நிலவில் தரையிறங்கும் என இந்தியாவே காத்திருந்தது. ஆனால், தரையிறங்க 2.1 கிலோமீட்டர் தொலைவு இருந்தபோது, அதிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்க முடியாமல் போனதால் சோகத்தில் இருந்த இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து நிலவின் ஆய்வில் முனைப்பு காட்டுவோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-2 திட்டத்தின் நோக்கத்தில் 90 முதல் 95 சதவிகித பணிகளை எட்டிவிட்டோம் என தெரிவித்துள்ள இஸ்ரோ நிலவின் சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டப்படி ஆர்பிட்டர் சுற்றிக் கொண்டிருக்கிறது எனவும் கூறியுள்ளது. ஆர்பிட்டரில் உள்ள கருவி மூலம் நிலவில் உள்ள நீர் மூலக்கூறுகள் மற்றும் கனிம வளங்களை ஆராய முடியும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது.
முந்தைய திட்டங்களை ஒப்பிடும்போது சந்திரயான் 2 திட்டத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைந்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ள இஸ்ரோ, சந்திரயான் 2 ஏவப்பட்டதில் இருந்து அதன் ஒவ்வொரு நிகழ்வையும் உலக நாடுகள் உற்றுநோக்கி கவனித்துக் கொண்டுவந்தன எனக் கூறியுள்ளது.
Loading More post
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி